பிரதமர் பதவிக்கு என்னைவிட பிரணாப் முகர்ஜி தகுதியானவர்: மன்மோகன்சிங்
புதுடெல்லியில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
பிரணாப் முகர்ஜி எனக்கு மிகவும் பிடித்த சக பணியாளராக இருந்தார். கடந்த 2004-ம் ஆண்டு சோனியா காந்தி என்னை பிரதமர் வேட்பாளராக தேர்ந்தெடுத்தார். ஆனால் அந்த பதவிக்கு என்னைவிட பிரணாப் முகர்ஜி தான் தகுதியானவர். அந்த தேர்வில் நான் எதுவும் செய்ய முடியாத நிலையில் நான் இருந்தேன் என்பது பிரணாப் முகர்ஜிக்கு தெரியும். அப்போது அவர் என்னை விட கட்சியில் மூத்தவர். எனவே அந்த விசயத்தில் வருத்தம் அடைவதற்கான அனைத்து காரணங்களும் அவரிடம் உள்ளது. மேலும் அவர் என்னைவிட பெரிய அரசியல்வாதியும் கூட. அவருக்கு இயல்பாகவே அரசியல் வரும். பிரச்சனைகளை தீர்பதற்கான நேர்த்திகள் அவருக்கு நன்றாக தெரியும். நான் அரசியலுக்கு வந்தது ஒரு விபத்து.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விழாவில் திமுக எம்.பி. கனிமொழி, முன்னாள் உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply