ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்துகொண்டது வரலாற்றில் மோசமான ஒரு சம்பவம்: டிரம்ப்
ஈரான் அணுஆயுதங்களை தயாரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு ஈரானுடன் அமெரிக்கா அணுஆயுதம் ஒப்பந்தம் செய்துகொண்டது. இதையடுத்து, அணு திட்டம், அணு ஆயுத தயாரிப்பு உள்ளிட்ட விஷயங்களில் அமெரிக்காவிடம், ஈரான் சரணடைந்தது. இதன்மூலம் பல ஆண்டுகளாக நீடித்த இப்பிரச்சனையில் சுமூகமாக தீர்வு எட்டப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் ஈரானுடான அணுசக்தி ஒப்பந்தம் முறிந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் திடீரென அறிவித்தார். இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டிரம்ப், “ஈரானுடனான அணு ஒப்பந்தம் முறிந்துவிட்டது. தவிர கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை திட்டம் கைவிடப்படுகிறது. ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தம் செய்துகொண்டது அமெரிக்க வரலாற்றில் மோசமான ஒரு சம்பவம். அது இன்றுடன் முடிந்துவிட்டது”, என்றார்.
ஈரான் மீது பேலும் சில புதிய தடைகள் விதிக்க முடிவெடுத்துள்ளதாக டிரம்ப் கூறினார். வடகொரியாவுடன் இணைந்து ஈரான் அணுஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகிறதா? என்பதை விசாரிக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply