அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாடு

அதிவேக வீதிகளில் மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் வாகனங்களைச் செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை சாரதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மழையுடனான வானிலை நிலவும் போது, அதிக வேகத்தில் வாகனங்களைச் செலுத்தியதால் விபத்துக்கள் நேர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக அதிவேக வீதியில் பயணிக்கும் போது வேகக்கட்டுப்பாட்டைப் பேணுமாறு அதிவேக வீதியின் நடவடிக்கை மற்றும் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் எஸ்.ஓபநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முன்னாள் செல்லும் வாகனங்களையும் பின்தொடரும் வாகனங்களையும் கண்காணித்தல் அவசியம் எனவும், இரு வாகனங்களுக்கும் இடையில் தேவையான இடைவெளி விட்டு வாகனங்களைச் செலுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை மழையுடனான வானிலை குறைவடைந்ததை அடுத்து ஆறுகளின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும் ஆறுகளை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் தொடர்ந்தும் நீர் தேங்கியிருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் கற்கை பிரிவின் பணிப்பாளர் பிறேமா ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

நில்வலா, களு மற்றும் களனி ஆறுகளின் நீர்மட்டம் இந்த நிலையில் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஏனைய ஆறுகளின் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்துள்ளதாகவும் பிறேமா ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply