இந்திய தொழிலாளிகளின் ரத்தத்திலும், வியர்வையிலும் கட்டப்பட்டது தாஜ்மகால்: யோகி ஆதித்யநாத்

ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மகால் இந்திய தொழிலாளிகளின் ரத்தத்திலும், வியர்வையிலும் கட்டப்பட்டது என முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசம் மாநில அரசின் சுற்றுலா துறை சார்பில் சமீபத்தில் வெளியிடப்பட்ட கையேட்டில் தாஜ்மகால் பெயர் இடம்பெறவில்லை. இதற்கு பகுஜன்சமாஜ், சமாஜ்வாடி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து  வருகின்றன.

இதற்கிடையே, உத்தரப்பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ. சங்கீத் சாம் பேசுகையில், தாஜ்மகால் துரோகிகளால் கட்டப்பட்டது என தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் செய்தியாளர்களிடம் கூறுகையில், தாஜ்மகாலை யார், என்ன காரணத்துக்காக கட்டினர் என்பது பிரச்சினை இல்லை. இந்தியர்களின் ரத்தத்திலும், வியர்வையிலும் தான் தாஜ்மகால் கட்டப்பட்டுள்ளது. ஆனாலும் அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் கடமை என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், மாநில அரசின் சுற்றுலா துறை சார்பில் நடைபெற்று வரும் பணிகளை முதல் மந்திரி பார்வையிட உள்ளார். வரும் அக்டோபர் 25-ம் தேதி முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தாஜ்மகாலுக்கு வருகை தரவுள்ளார் என தெரிவித்துள்ளனர்.

பா.ஜ.க. எம்.எல்.ஏ. சங்கீத் சாம் பேசிய சர்ச்சையே நீங்காத நிலையில், உ.பி. முதல் மந்திரி தாஜ்மகால் குறித்து கூறிய செய்தி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply