யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்திற்கு கிழக்கு பல்கலை ஆதரவு
தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துவரும் வகுப்பு பகிஸ்கரிப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்கள் தொடர்பில் உடனடி கவனம் செலுத்தி தீர்த்துவைக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாதபட்சத்தில் தாமும் வகுப்பு பகிஸ்கரிப்பினை மேற்கொள்ளப்போவதாகவும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவக மாணவர் ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவக மாணவர் ஒன்றியம் அறிக்கையொன்றினை இன்று விடுத்துள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
போர் முடிவுற்ற பின்னரும் தமிழ் அரசியல் கைதிகள் என்னும் போர்வையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமது உறவுகளை விடுதலைசெய்வதாக உறுதியளித்தும் இதுவரையில் அவர்களை விடுதலைசெய்வதற்கான நடவடிக்களை அரசாங்கம் எடுக்கவில்லை.
அவர்கள் இன்னும் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.அனுராதபுர சிறைச்சாலையில் மூன்று தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையினை வலியுறுத்தியும் சில கோரிக்கைகளை முன்வைத்தும் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டுவந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply