சைட்டத்தை தடை செய்வதே அரசாங்கத்தின் தீர்மானமாக இருக்க வேண்டும்
சைட்டம் மருத்துவக் கல்லூரி தொடர்பில் அரசாங்கம் தீர்மானம் ஒன்றை எடுக்குமாயின், அது அந்நிறுவனத்தை தடை செய்யும் வகையில் மாத்திரமே அமைய வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தவிர்ந்த எந்தவொரு தீர்மானத்தையும் தாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என அச்சங்கத்தின் செயலாளர் டாக்டர் ஹரித அலுத்கே கூறியுள்ளார். சைட்டம் தொடர்பில் விரைவில் காத்திரமான ஒரு தீர்மானத்தை அரசாங்கம் அறிவிக்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் கூறியிருந்தார். அத்துடன், மாகாநாயக்கர்களும் இது தொடர்பில் உடனடியாக தீர்வொன்றை அறிவிக்குமாறு அரசாங்கத்துக்கு அழுத்தங்களை கொடுத்துள்ளனர்.
இதேவேளை, உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல சைட்டம் எந்தக் காரணம் கொண்டும் மூடப்பட மாட்டாது என பாராளுமன்றத்திலும் பொதுக் கூட்டங்களிலும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply