ஜெர்மனியில் முனிச் நகரில் கத்தியால் தாக்கியதில் 4 பேர் காயம்

ஜெர்மனியின் தெற்கே முனிச் நகர் அமைந்துள்ளது. இந்நகரின் கிழக்கே ரோசென்ஹெய்மர் பிளாட்ஸ் என்ற பகுதி அருகே 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கத்தியுடன் இன்று திரிந்துள்ளார். அவர் அந்த வழியே சென்றவர்கள் மீது கத்தியை கொண்டு திடீரென்று தாக்குதல் நடத்தியுள்ளார். அதன்பின் அங்கிருந்து தனது கறுப்பு நிற சைக்கிளில் தப்பியோடி விட் இந்த சம்பவத்தில் 4 பேர் லேசான காயமடைந்துள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் போலீசார் தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர். அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், தாக்குதல் நடத்தியவர் தொடர்ந்து பிடிபடாமலேயே உள்ளார். குடியிருப்புவாசிகள் வீட்டிற்குள்ளேயே இருங்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த தாக்குதலுக்கான காரணம் எதுவும் இதுவரை தெரியவரவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜூலை 2016ம் ஆண்டில் ஈரான் நாட்டு டீன் ஏஜ் நபர் ஒருவர் முனிச் நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் 9 பேர் பலியாகினர். அதன்பின் அந்நபர் தற்கொலை செய்து கொண்டார்.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply