வந்த கருமம் இருந்த கருமத்தை விட மோசமானது

அரசாங்கத்தின் நிலை தொடர்ந்தும் இவ்வாறே செல்லுமானால் நாடு விரைவில் அழிவைச் சந்திக்கும் என, கடம்பே ராஜோபவனாராதிபதி கெப்படியாகொட சிரிவிமல தேரர் தெரிவித்தார். மேலும், தற்பொழுது மாட்டியுள்ள அரசாங்கத்தில் இருந்து விடுபடுவதற்கு சந்தர்ப்பத்தை மக்கள் எதிர்ப்பார்த்துள்ளனர். வந்த கருமம் இருந்த கருமத்தை விட மோசமானது எனவும் குறிப்பிட்டார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்க, நேற்று கடம்பே ராஜோபவனாராதிபதி கெப்படியாகொட சிரிவிமல சந்தித்து ஆசீர்வாதம் பெறச் சென்ற போதே, தேரர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், வரலாற்று நெடுகிலும் நாடு செல்ல வேண்டிய பாதையை சரிசெய்து கொடுத்தது மகா சங்கத்தினரே ஆவர். தற்போதைய அரசாங்கம் மகா சங்கத்தினருடன் அகௌரவமான முறையில் நடந்துகொள்கின்றது.

“கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளில் திருப்தி காணாது என நினைத்தே, மக்கள் இன்னொரு செயற்பாட்டுக்காக இந்த அரசாங்கத்தை தேர்ந்தெடுத்தனர். தற்பொழுது தேர்ந்தெடுத்த அரசாங்கம் இருந்த அரசாங்கத்தை விட மோசமாகவுள்ளது.

“தற்போதைய அரசாங்கம் ஏதாவதொரு சூத்திரத்தை வைத்து தேர்தலைப் பிற்போட்டு வருகின்றது. நாட்டின் தலைவர்கள் யார் யாரோ பின்னால் சென்று அதிகாரத்தை பெற்றுக் கொள்கின்றனர். இருப்பினும், அவர்கள் அது தங்களுக்கு புண்ணியத்துக்காக கிடைத்த ஒன்று என்று நினைப்பதில்லை. இத்தகையவர்கள், ஒரு புறத்தில் வங்கியை நாசமாக்குகின்றனர். மறுபுறம் கல்வியையும் நாசமாக்கும் வரை பார்த்துள்ளனர். இது பரிதாபநிலையாகவே பார்க்க வேண்டியுயள்ளது.

இதனால் மக்களுக்காக வேலை செய்ய வேண்டும். இந்நிலை தொடர்ந்து செல்லுமானால் நாடு அழிவைச் சந்திக்கும்” எனவும் தேரர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply