நெல்லையில் 4 பேர் தீக்குளிப்பு: கந்துவட்டி கேட்டு மிரட்டிய 3 பேர் கைது

கந்துவட்டி கொடுமையால் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளித்தது தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.மக்கள் குறை தீர்க்கும் நாளில் இந்த பரிதாப சம்பவம் பலர் கண் எதிரில் நடந்த காட்சிகள் மனதை பதைபதைக்க வைத்தது. மனதை கனக்க வைத்த இந்த கொடூர சம்பவத்தை செய்தவர் இசக்கிமுத்து. கூலித் தொழிலாளியான இவர் நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள காசிதர்மம் எனும் கிராமத்தை சேர்ந்தவர். இவரது மனைவி சுப்புலட்சுமி (26).இவர்களுக்கு மதி ஆருண்யா (4), அட்சயா(1½) ஆகிய 2 குழந்தைகள் இருந்தனர். நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக இசக்கிமுத்து தனது மனைவி, குழந்தைகளுடன் வந்தார். அவருடன் இசக்கிமுத்துவின் தம்பி கோபியும் வந்திருந்தார். குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் அலுவலகம் முன்பு அவர்கள் நின்று கொண்டிருந்தனர். அப்போது இசக்கிமுத்துவுடன் வந்த கோபி கழிவறை செல்வதாக கூறி சென்றார்.

இந்தவேளையில் இசக்கிமுத்து தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணையை தன் மீதும், தனது மனைவி, குழந்தைகள் மீதும் ஊற்றி தீவைத்தார். தீ மளமளவென பற்றி எரிந்தது. இதை சற்றும் எதிர்பாராத அக்கம்பக்கத்தில் நின்றவர்கள் மண்ணை அள்ளி வீசி தீயை அணைத்து 4 பேரையும் காப்பாற்ற முயன்றனர்.

 

சிறிது நேரத்தில் அவர்களது உடல் கருகியது. உடனே அவர்களை நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சுப்புலட்சுமி மற்றும் குழந்தைகள் மதி ஆருண்யா, அட்சயா ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். இசக்கிமுத்து தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முன்னதாக இசக்கிமுத்து, சுப்புலட்சுமி ஆகியோரிடம் நெல்லை ஜெ.எம்.-3 கோர்ட்டு நீதிபதி கார்த்திகேயன் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றார். மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆஸ்பத்திரிக்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். கந்துவட்டி கொடுமை காரணமாக இசக்கிமுத்து தனது மனைவி, குழந்தைகள் மீது தீவைத்து தானும் தற்கொலைக்கு முயன்றது விசாரணையில் தெரியவந்தது.

இசக்கிமுத்து தனது உறவினரான தளவாய்ராஜ் என்பவரின் மனைவி முத்துலட்சுமியிடம் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கடன் வாங்கியிருந்தாராம். அதற்கு வட்டியும், முதலுமாக ரூ.2 லட்சத்து 34 ஆயிரம் திருப்பி கொடுத்துள்ளார்.

அதன்பிறகும் பணம் கொடுத்தவர் தரப்பில் கந்துவட்டி கேட்டு மிரட் டல் விடுக்கப்பட்டது. இதைய டுத்து இசக்கிமுத்து அச்சன் புதூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.

இதனால் அவர் நெல்லை கலெக்டர் அலுவலகத்திலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் 6 தடவை புகார் கொடுத்துள்ளார்.

அதன் பிறகும் உரிய நடவடிக்கை இல்லை. ஆனால் கந்துவட்டி மிரட்டல் அதிகரித்தது. இதனால் இசக்கிமுத்து ஊரை விட்டு வெளியேறி வேறு ஊரில் குடியேறினார்.

தொடர்ந்து அவருக்கு கந்துவட்டி கேட்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து நேற்று மீண்டும் கலெக் டர் அலுவலகம் வந்து விபரீத முடிவை எடுத்துள்ளார். மேற்கண்ட தகவல்கள் விசாரணையில் தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கந்துவட்டி கேட்டு கொடுமைப்படுத்திய முத்துலட்சுமி, அவரது கணவர் தளவாய்ராஜ், முத்துலட்சுமியின் மாமனார் காளிராஜ் ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டியது (306, 511), கந்துவட்டி கொடுமை ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட் டது. தனிப்படை போலீசார் காசிதர்மத்துக்கு உடனடியாக விரைந்து சென்று முத்துலட்சுமி, தளவாய்ராஜ், காளிராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

கைதான 3 பேரும் இன்று காலை நெல்லை அழைத்து வரப்பட்டனர். பாளை போலீஸ் நிலையத்தில் வைத்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply