இரட்டை இலை சின்னத்துக்காக ஆர்.கே.நகர் தேர்தலை தாமதப்படுத்துவதா?: மு.க.ஸ்டாலின் கண்டனம்
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை கொளத்தூர் தொகுதிக்கு சென்று அங்கு நடைபெறும் பல்வேறு திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். எனது தொகுதியில் நடைபெறும் பணிகள் எந்த அளவில் உள்ளது என்பதை பார்வையிட்டேன். பணிகளை வேகப்படுத்துவது சம்பந்தமாக அதிகாரிகளிடம் கூறி உள்ளேன்.குறிப்பாக வில்லிவாக்கத்தில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க ரெயில்வே பட்ஜெட்டில் ரூ.7 கோடியே 35 லட்சம் ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து அந்த பணிகள் நடந்து வருகிறது. இதை விரைந்து முடிக்க அதிகாரிகளை கேட்டுக் கொண்டேன்.
மாநகராட்சி மூலம் நடை பெறும் பணிகள், குடிநீர் வாரியம் மூலம் நடைபெறும் பணிகளையும் ஆய்வு செய்தேன். இதில் ஓரளவு முன்னேற்றம் உள்ளது. இதை மேலும் துரிதப்படுத்த கேட்டுக் கொண்டுள்ளேன்.
ஜி.கே.எம். காலனி, ஜம்புலிங்கம் காலனியில் உயர் அழுத்த மின்கம்பியை புதைவிட கேபிளாக பதிக்கும்பணி முடிந்ததையும் பார்வையிட்டேன். மாநகராட்சி தொடக்க பள்ளிக்கு தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்க நிதி ஒதுக்கி இருந்தேன். அந்த பணி முடிந்ததால் அதையும் தொடங்கி வைத்தேன்.
கே:- மாநகராட்சி பணிகளின் செயல்பாடு திருப்தியாக உள்ளதா?
ப:- ஏறக்குறைய 1 வருடமாக மாநகராட்சிக்கு கவுன்சிலர்கள் இல்லை. சென்னை மட்டுமல்ல தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முயற்சிக்காதது வேதனைக்குரியது.
இந்த ஆட்சியில் 2 முறை மழை வெள்ள புயலால் எந்த அளவுக்கு மக்கள் பாதிக்கப்பட்டனர் என்பதை அனைவரும் அறிவார்கள்.
அதுபோன்ற சூழல் மீண்டும் வந்து விடக்கூடாது என்பதற்காக தி.மு.க.வினரிடம், பொதுநல அமைப்பினரும், முன் எச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் இந்த அரசை நம்பி பிரயோஜனம் இல்லை என்று நான் அறிக்கை விட்டிருக்கிறேன்.
கே:- இரட்டை இலை சின்னம் யாருக்கு என தெரிந்த பிறகுதான் டிசம்பர் 31-ந்தேதிக்குள் ஆர்.கே.நகர் தொகுதிக்கு தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் கூறி இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளதே?
ப:- அப்படி அவர் சொன்னதாக தெரியவில்லை. அது போல் கூறமுடியாது. அவ்வாறு கூறி இருந்தால் அது ஜனநாயக படுகொலை இரட்டை இலை சின்னம் யாருக்கு என தெரிந்த பிறகு தேர்தலை நடத்த உத்தர விட்டால் அது சர்வாதிகார செயலாகும். ஏற்கனவே ஆர்.கே.நகர் தொகுதியில் ஏன் தேர்தல் நிறுத்தப்பட்டது?
அங்கு ரூ.89 கோடிக்கு பணம் பட்டுவாடா செய்ததற்கான ஆவணத்தை வருமான வரிதுறையினர் குட்கா பாஸ்கர் மன்னிக்கனும் டெங்கு பாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தி கைப்பற்றினார்கள். அந்த ஆவணத்தை எடுத்த பிறகு தான் அதை மையமாக வைத்து இடைத்தேர்தலை நிறுத்தினார்கள்.
இதற்கு வழக்கு உண்டா? எப்.ஐ.ஆர். உண்டா? ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை? இந்த சம்பவத்திற்கு முறையாக நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தி.மு.க. மட்டுமல்ல எல்லோரும் கேட்கிறார்கள்.
கே:- காசிமேடு மீனவர்கள் மீதான தடியடிக்கு தி.மு.க. சதிதான் காரணம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறி இருக்கிறாரே?
ப:- ஜெயக்குமார் சூப்பர் முதல்-அமைச்சர் அல்ல. டூப்பர் முதல்-அமைச்சர் ஆக உள்ளார். அவருக்கு பதில் சொல்ல விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply