ஏமன் நாட்டில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது அமெரிக்கா குண்டு வீச்சு: 13 பேர் உயிரிழப்பு
அரபு நாடுகளான ஈராக், சிரியாவில் பதுங்கி இருக்கும் ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீது அமெரிக்கா தொடர்ந்து குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.இந்த நிலையில் பக்கத்து நாடுகள் சிலவற்றிலும் ஐ.எஸ்.தீவிரவாதிகள் புகுந்து சில இடங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.இதேபோல் ஏமன் நாட்டில் அல்பேதா மாகாணத்தின் சில பகுதிகளை ஐ.எஸ்.தீவிரவாதிகள் கைப்பற்றி வைத்துள்ளனர். அந்த இடங்களில் அமெரிக்கா ஏற்கனவே சில முறை தாக்குதல் நடத்தி உள்ளது.
கடந்த 16-ந் தேதி ஐ.எஸ். தீவிரவாதிகளின் முகாம்களில் நடத்தப்பட்ட குண்டு வீச்சில் 50 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் மீண்டும் அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது. ஐ.எஸ்.தீவிரவாதிகள் 2 வாகனங்களில் சாலையில் சென்று கொண்டு இருப்பதை அறிந்த அமெரிக்க விமானப்படை உடனடியாக ஆளில்லா விமானங்களை அனுப்பி குண்டு வீச செய்தது. இதில் 2 வாகனங்களும் சிதறின. அதில் பயணித்த 13 ஐ.எஸ். தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply