சிறீ ரெலோ விடுக்கும் ஓர் உருக்கமான வேண்டுகோள்!

அன்பார்ந்த வவுனியா வாழ் மக்களுக்கு!

சிறீ ரெலோ விடுக்கும் ஓர் உருக்கமான வேண்டுகோள்!

வன்னியில் நடைபெறும் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து வந்து கொண்டிருக்கும் எமது உடன் பிறப்புக்களுக்களுக்கு சிறுவர்களுக்கான பால்மா, உடுப்புக்கள், தண்ணீர் போத்தல், பனடோல், பிஸ்கற்றுகள் ஏனைய அத்தியாவசியப் பொருட்கள் உடனடியாகத் தேவைப்படுகின்றது. இப்பொருட்களை பொது மக்கள், வர்த்தக ஸ்தாபனங்கள், விளையாட்டுக் கழகங்கள், கிராமோதைய சபைகள் ஏனைய சங்கங்கள் ஆகியவை சேகரித்து வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வரும் மக்களுக்கு வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். பொருட்களை நேரடியாக வழங்க முடியாதவர்கள் எமது சிறீ ரெலோ காரியாலத்தில் தந்துதவுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

உணவு உனடியாகத் தேவைப்படும் இடங்கள்
ஓமந்தை பாடசாலை
பூவரசங்குளம் பாடசாலை
நெளுக்குளம் பாடசாலை
புதுக்குளம் பாடசாலை

சிறீ ரெலோ காரியாலயம்
இல.01 A ,மன்னார் வீதி
வவுனியா
தொ.பே: 024- 2220568

சிறீ ரெலோ அமைப்பினரால் அண்மையில் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட இடம்பெயர்ந்து வந்த மக்களுக்கான உதவி பணிகள் சிலவற்றின் புகைப்படங்கள் பார்க்க… இங்கே சொடுக்கவும்

மூலம்/ஆக்கம் : ஊடக அறிக்கை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply