ரோஹிங்கியா முஸ்லிம்களை திரும்ப அழைக்க நடவடிக்கை: மியான்மர் தலைவர் சூகி தகவல்

மியான்மரில் ஆங் சாங் சூகி தலைமையிலான ஜனநாயக தேசிய லீக் (என்எல்பி) ஆட்சியில் உள்ளது. அதிபராக சூகியின் நண்பர் டின் கியாவ் பதவி வகிக்கிறார். மியான்மர் அரசின் ஆலோசகராகவும் ஆளும் கட்சியின் தலைவராகவும் சூகி இருக்கிறார்.இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி மியான்மரில் ராணுவத்துக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கும் மோதல் ஏற்பட்டது. அதன்பின் ராணுவம் கடும் நடவடிக்கையில் இறங்கியதால், லட்சக்கணக்கான முஸ்லிம்கள் மியான்மரில் இருந்து வங்கதேசத்துக்கு அகதிகளாகச் சென்றனர். இந்தியாவிலும் ஆயிரக்கணக்கில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் தங்கி உள்ளனர்.

குறிப்பாக 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்கதேசத்துக்குள் சென்றதால், அவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர முடியாமல் அந்நாட்டு அரசு திணறி வருகிறது. இதையடுத்து அவர்களை திரும்ப அழைக்க வேண்டும் என்று வங்கதேச அரசு வலியுறுத்தி வருகிறது.

இந்த சூழலில் வங்கதேச உள்துறை அமைச்சர் அசாதுஸமான் கான் தலைமையிலான 10 பேர் அடங்கிய குழுவினர், நேற்று ஆங் சாங் சூகியைச் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அதன்பின் பத்திரிகையாளர்களிடம் சூகி கூறும்போது, ‘‘மியான்மரில் இருந்து அகதிகளாக வெளியேறிய ரோஹிங்கியா முஸ்லிம்களை திரும்ப அழைக்கும் நடவடிக்கையை அரசு தொடங்கிவிட்டது’’ என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply