இடம்பெயர்ந்தோருக்கான நிவாரண உதவியில் கல்வி அமைச்சும் பங்கேற்பு
வடக்கிலிருந்து இடம் பெயர்ந்து வவுனியாவிலுள்ள நலன்புரி முகாம்களில் வாழும் மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க கல்வி அமைச்சும் முன்வந்துள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவின் பணிப்புரைக்கமைய அமைச்சின் செயலாளர் நிமல் பண்டாரவின் வழிகாட்டலுடன் இலங்கை பரீட்சைத் திணைக்களம், கல்வி வெளியீட்டுத் திணைக்களம், தேசிய கல்வி நிறுவகம் மற்றும் கல்வியியற் கல்லூரிகள் என்பன ஒன்றிணைந்து புதிய ஆடைகள், டவல்கள், தண்ணீர் போத்தல்கள், உலர் உணவு வகைகள், மருந்துப் பொருட்கள், பாத்திரங்கள், சவர்க்காரம், பற்பசை போன்றவற்றை அனுப்பவுள்ளன.
எதிர்வரும் மே மாதம் 5ஆம் திகதிக்கு முன்னர் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளருடன் தொடர்பு கொண்டு இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்குவதற்காக சேகரிக்கப்பட்ட பொருட்களின் விபரம் பற்றி தெரிவிக்குமாறு அமைச்சு மேல்குறிப்பிடப்பட்ட நிறுவனங்களைக் கேட்டுக்கொள்கிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply