புலிகள் படையினரிடம் சரணடையப் போவதில்லை : நடேசன்

அரசாங்கப் படையினரிடம் சரணடையப் போவதில்லை என புலிகள் மீண்டும் வலியுறுத்தி உள்ளனர். புலிகள் தமிழ் மக்களை மனிதய கேடயமாக பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படும் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாதென புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்துள்ளார்.
 
யுத்த களத்தில் எவ்வாறான நிலைமைகளை எதிர் நோக்கினாலும் `தமிழீழ` போராட்டம் தொடரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் மக்களின் `தமிழீழ` பேராட்டம் எந்தக் காரணத்திற்காகவும் கைவிடப்பட மாட்டாதென அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு இலங்கை அரசாங்கத்தை யுத்தம் நிறுத்தமொன்றுக்கு செல்லுமாறு சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டுமென நடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply