அமெரிக்க தூதுவர் தேவையில்லாத விடயத்தில் மூக்கை நுழைக்கிறார்- தேசிய ஊடகம் விசனம்

இலங்கையில் சமஷ்டி முறைமையிலான ஆட்சி ஏற்படுத்தப்பட வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேஸாப் இரு சந்தர்ப்பங்களில் வெளியிட்டுள்ள கருத்துக்களுக்கு வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் இதுவரை எந்தவித பதிலும் வழங்காதிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தூதுவர்கள் நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு உரிமை பெறவில்லை. அமெரிக்க தூதுவர் இதனை மீறியுள்ளதாகவும் இன்றைய சகோதர தேசிய ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கு முன்னர் இந்நாட்டில் இருந்த எந்தவொரு அமெரிக்க தூதுவரும் இவ்வாறான கருத்தை வெளியிடவில்லையெனவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply