ஒழுக்கமற்ற அரசியல்வாதிகளால் முன்னேற்றப்பாதைக்கு தடை : மைத்திரிபால சிறிசேன
ஒழுக்கமான அரசியல்வாதிகள் இல்லாமையினாலேயே நாட்டை முன்னேற்றப்பாதைக்கு கொண்டு செல்ல முடியாமைக்கான முக்கிய காரணம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.ஹப்புத்தலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதிக்கு முன்னர் கடந்த அரசாங்கத்தை சீரழித்த அதிகாரிகளே, உள்ளுராட்சி மன்றங்களில் அதிகளவில் தலைமைப் பொறுப்பை வகித்து வருகின்றனர்.
2012, 2013 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டவர்களே ஊழல், போதைப்பொருள் வியாபாரம், அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தல் உள்ளிட்ட பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களில் நூற்றுக்கு 80 சதவீதமானவர்கள் இன்றும் பதவிகளில் உள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply