ஒபாமாவை பதற்றத்துடன் பேட்டி கண்ட பிரிட்டன் இளவரசர்

பிரிட்டன் நாட்டின் பிரபல ஒலி – ஒளிபரப்பு நிறுவனமான பி.பி.சி. குழுமத்துக்கு சொந்தமான பி.பி.சி.ரேடியோ 4 – அலைவரிசைக்காக பிரிட்டன் நாட்டின் வேல்ஸ் இளவரசர் ஹாரி கவுர நேர்காணலாளராக செயல்பட்டார்.கனடா நாட்டின் டொராண்டோ நகரில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற விளையாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபமாவை நேர்காணல் செய்யும் பொறுப்பு இளவரசர் ஹாரிக்கு வழங்கப்பட்டது.

இந்த நேர்காணலின் ஒரு பகுதியை இளவரசர் ஹாரியின் கென்சிங்டன் பேலஸ் தற்போது வெளியிட்டுள்ளது. வீடியோவாக வெளியாகியுள்ள இந்த பதிவில் அமெரிக்க அதிபர் பதவிக் காலத்தின் கடைசி நாளில் ஒபாமாவின் மனநிலை, ஓய்வுக்கு பிந்தைய அவரது எதிர்கால திட்டம் போன்றவற்றைப் பற்றி ஒபாமா மனம் திறந்துள்ளார்.

முன்னதாக, தன்னை பேட்டி காணவந்த ஹாரியிடம் ’நான் பொறுமையாக பேசக் கூடியவன். இந்த பேட்டிக்காக வேகமாக பேச வேண்டுமா? என்று ஒபாமா கேட்க – அதற்கான அவசியமில்லை என ஹாரி கூறுகிறார். பிரிட்டன் நாட்டு ஆங்கிலத்தின் சாயலில் நான் பேச வேண்டுமா? என சிரித்தபடி ஒபாமா கேட்க ஹாரிஸ் பதற்றத்துடன் சமாளிக்கும் காட்சி இந்த முன்னோட்ட வீடியோவில் பதிவாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னரும் பிரிட்டன் நாட்டு அரச குடும்பத்தாருடன் ஒபாமாவும் அவரது மனைவி மிச்சேலும் நெருக்கமாக பழகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரிட்டன் இளவரசர் சார்லஸ் – டயானா தம்பதியரின் மகனான ஹாரிஸ் திருமண நிச்சயதார்த்தத்தின்போது தனது டுவிட்டர் பக்கத்தில் ஒபாமா வாழ்த்து தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம்.

ஒபாமாவின் பேட்டி வரும் 27-ம் தேதி பி.பி.சி.ரேடியோ 4 – அலைவரிசையில் ஒலிபரப்பாகும் என தெரிகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply