முதல் உலகப்போரில் மாயமான ஆஸ்திரேலிய நீர்மூழ்கி கப்பல் 103 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு
முதல் உலகப்போரின் போது ஆஸ்திரேலியா கடற்படைக்கு சொந்தமான ‘எச்.எம்.ஏ.எஸ். ஏஇ-1’ என்ற நீர்மூழ்கி கப்பல் இடம் பெற்றது. அக்கப்பல் பப்புவா நியூகினியா கடல் பகுதியில் கடந்த 1914-ம் ஆண்டு திடீரென மாயமானது.அதில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து கடற்படை வீரர்கள் 35 பேர் இருந்தனர். அந்த கப்பலை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் இக்கப்பலின் உடைந்த பாகங்கள் பப்புவா நியூ கினியாவில் பார்க் தீவுகள் பகுதியில் கடலில் கண்டு பிடிக்கப்பட்டது. நீருக்குள் மூழ்கி சென்று தேடும் ‘டிரோன்’ பயன்படுத்தப்பட்டன.
நீர்மூழ்கி கப்பலின் உடைந்த பாகங்களை நீர்மூழ்கி வீரர்கள் குழுக்கள் கண்டுபிடித்துள்ளன. ஆனால் அதில் பயணம் செய்த ஊழியர்களின் உடல்கள் மீட்கப்பட்டது குறித்த தகவல் வெளியாகவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply