தேர்­தல் மீறல்­கள் தொடர்பில் இதுவரை 35 முறைப்பாடுகள்

உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­த­லுக்­கான திகதி அறி­விக்­கப்­பட்­ட­தில் இருந்து இது­வ­ரை­யான காலப் பகு­தி­யில் 12 முறைப்­பா­டு­கள் ‘கபே’ அமைப்­புக்­கும் 35 முறைப்­பா­டு­கள் பவ்­ரல் அமைப்­புக்­கும் கிடைத்­துள்­ளன.இது குறித்து கபே அமைப்­பின் நிறை­வேற்று அதி­காரி கீர்த்தி தென்­ன­கோன் தெரி­வித்­த­தா­வது; உள்­ளூ­ராட்­சி­மன்­றத் தேர்­த­லுக்­கான திகதி அறி­விக்­கப் பட்­ட­தி­லி­ருந்து இது­வ­ரை­யான காலப்­ப­கு­தி­யில் 12 முறைப்­பா­டு­கள் கிடைத்­துள்­ளன. இதில் மூன்று வன்­முறை சம்­ப­வங்­கள் பதி­வா­கி­யுள்­ளன. ஏனை­யவை அரச உடை­மை­க­ளைப் பயன்­ப­டுத்­து­வது தொடர்­பா­னவை.

பொது மக்­க­ளுக்கு உத­வி­கள் வழங்­கு­வது போன்­ற­ன­வும் அடங்­கும். அக்­க­ரை­பற்­றில் தேசிய காங்­கி­ரஸ் கட்­சி­யின் வேட்­பா­ளர் போதை மாத்­தி­ரை­க­ளு­டன் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

தேர்­தல் திகதி அறி­விப்பு வெளி­யா­னது முதல் இது­வரை பல்­வேறு வன்­முறை சம்­ப­வங்­கள் பதி­வா­கி­யுள்­ளன. இரு கட்சி ஆத­வா­ளர்­க­ளுக்­கி­டை­யி­லான மோதல் தொடர்ந்­தும் அதி­க­ரித்த வண்­ண­முள்­ளன.

நீதி­யா­ன­தும் நியா­ய­மா­ன­து­மான தேர்­தலை நடத்த அனை­வ­ரும் முழு­மை­யான ஒத்­து­ழைப்­பினை வழங்க வேண்­டும் என்­றார்.

‘‘தேர்­த­லுக்­கான திகதி அறி­விக்­கப்­பட்­ட­தில் இருந்து இது­வரை 35 முறைப்­பாடு கிடைக்­கப்­பெற்­றுள்­ளன. இதில் வன்­மு­றைச் சம்­ப­வங்­க­ளும், அரச உடை­மை­கள் முறை­யற்ற பாவனை போன்ற குற்­றச்­சாட்­டு­க­ளும் உள்­ளன’’ என பவ்ரல் அமைப்­பின் செயற்­பாட்­டா­ளர் ரோஹன ஹெட்­டி­யா­ரச்சி தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply