அமெரிக்காவில் கிறிஸ்துமஸின் போது தாக்குதல் நடத்த சதி திட்டம் – முன்னாள் கடற்படை வீரர் கைது
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பியர்-39 என்ற சுற்றுலா தலம் உள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அங்கு ஏராளமானோர் கூடுவார்கள்.எனவே அங்கு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து புலனாய்வு அமைப்பின் ‘எப்.பி.ஐ’ அதிரடி சோதனையில் ஈடுபட்டது. கலிபோர்னியா மாகாணம் மோடஸ்டோ பகுதியில் நடந்த சோதனையில் எவரிட் ஆரோன் ஜேம்சன் (26) என்பவர் சிக்கினார். அவரிடம் இருந்து ஆயுதங்கள், வெடி பொருட்கள் மற்றும் உயில் போன்றவை கைப்பற்றப்பட்டது.
ஜேம்சனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது பியர்-39 என்ற இடத்தில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியதை ஒப்புக்கொண்டார் எனவே அவர் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்க கடற்படையான மரைன் கார்ப்ஸ் படை பிரிவில் முன்னாள் ரரணுவ வீரராக இருந்தார். 2009-ம் ஆண்டில் இணைந்த அவர் ஆஸ்துமா நோய் பாதிப்பால் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
ஐ.எஸ். ஆதரவாளரான இவர், பயங்கரவாதத்துக்கு ஆதரவான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் எழுதி பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது லாரி டிரைவராக இருக்கும் அவர் பியர்-39 சுற்றுலா தலத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி உயிரிழப்புகளை ஏற்படுத்த சதி திட்டம் தீட்டியிருந்தார். தாக்குதல் நடத்திவிட்டு தற்கொலை செய்து கொள்ளவும் திட்டமிட்டிருந்தார். ஆனால் இவரது சதி திட்டத்தை புலனாய்வு துறை அதிகாரிகள் முறியடித்து விட்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply