சுற்றுலா பயணிகளை கவர சர்வதேச விண்வெளியில் ஆடம்பர சொகுசு ஓட்டல்: ரஷியா கட்டுகிறது

பூமிக்கு மேல் விண்வெளியில் 400 மைல் சர்வதேச விண்வெளி ஆய்வகம் கட்டப்பட்டு வருகிறது. அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், கனடா மற்றும் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க், பெல்ஜியம் உள்ளிட்ட 17 ஐரோப்பிய நாடுகளின் விண்வெளிகழகமும் இணைந்து அதை உருவாக்கி வருகிறது.அதற்காக இதுவரை 150 பில்லியன் டாலர் (ரூ,96 லட்சத்து 75 ஆயிரம் கோடி) செலவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்கு 5 நட்சத்திர சொகுசு ஆடம்பர ஓட்டலை கட்ட ரஷியா திட்டமிட்டுள்ளது.

அங்கு கட்டப்படும் ஓட்டலில் 4 ஆடம்பர அறைகள் கட்டப்பட உள்ளன. ஒவ்வொன்றும் 4 கன மீட்டர் அளவில் இருக்கும். இங்கு மருத்துவ வசதி, உடற்பயிற்சி கூடம் வை-பை வசதி போன்றவை ஏற்படுத்தப்பட உள்ளது.

விண்வெளிக்கு சுற்றுலா பயணிகளை கவர இந்த ஓட்டல் கட்டப்படுகிறது. இந்த ஓட்டல் ரூ.2100 கோடியில் இருந்து ரூ.3360 கோடி செலவில் கட்டப்பட உள்ளது. தனியார் மற்றும் ரஷிய அரசும் இணைந்து விண்வெளியில் ஓட்டல் கட்டுகின்றனர்.

இங்கு ராக்கெட் மூலம் வரும் சுற்றுலா பயணிகளிடம் கட்டணமாக ரூ.300 கோடி வசூலிக்கப்படும். அவர்கள் இங்கு 1 முதல் 2 வாரங்கள் தங்கலாம்.

அவர்கள் இங்கு மேலும் ஒரு மாதம் தங்கவும், விண்வெளியில் நடக்கவும் கூடுதலாக ரூ.130 கோடி வசூலிக்கப்படும். விண்வெளியில் நடக்க ஆய்வகத்தில் தங்கியிருக்கும் வீரர்கள் உதவி செய்வார்கள்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply