ஆர்.கே நகர் சட்டமன்ற உறுப்பினராக டிச. 29-ம் தேதி பதவியேற்கிறார் டி.டி.வி தினகரன்
ஆர்.கே நகர் தொகுதிக்கு கடந்த 21-ம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டன. சுயேட்சையாக போட்டியிட்ட டி.டி.வி தினகரன் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதல் முன்னிலை வகித்து வந்தார்.யாரும் எதிர்பார்க்காத வகையில் எல்லா சுற்றுகளிலும் முன்னிலை வகித்த அவர் 89 ஆயிரத்து 13 வாக்குகள் பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை விட 40 ஆயிரத்து 707 வாக்குகள் கூடுதலாகவே பெற்று வென்ற அவர் தமிழக இடைத்தேர்தல் வரலாற்றில் முத்திரை பதித்தார்.
தினகரனின் வெற்றி தமிழக அரசியலில் ஏற்படுத்திய அதிர்வலைகள் ஓயாத நிலையில், வரும் 29-ம் தேதி அவர் முறைப்படி எம்.எல்.ஏ.வாக பதவியேற்க உள்ளார். மதியம் 1.30 மணிக்கு சபாநாயகர் தனபால் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்ய உள்ளார்.
பிப்ரவரி மாதம் ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, சட்டசபைக்குள் முதன் முறையாக அவர் ஆர்.கே நகர் எம்.எல்.ஏ.வாக நுழைய உள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply