ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்
ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் தாரோ கோனோ எதிர்வரும் ஜனவரி 5ம் திகதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.15 வருடங்களின் பின்னர் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜப்பான் வெளிவிவகார அமைச்சரின் குறித்த விஜயத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் திலக் மாறப்பன ஆகியோருடனான சந்திப்புக்கள் இடம்பெறவுள்ளன.
குறித்த விஜயத்தில் இலங்கை ஜப்பான் இராஜதந்திர உறவுகள், பொருளாதார, வர்த்தக முதலீட்டு உடன்படிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply