மத்திய வங்கி முறி மோசடி: ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை நாளைக்குள் வருவது உறுதி : சுமதிபால
மத்திய வங்கி முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்ய ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை நாளைக்குள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைப்பது உறுதி என ஆணைக்குழுவின் செயலாளர் சுமதிபால உடுகம்சூரிய தெரிவித்துள்ளார்.ஆணைக்குழுவின் ஆயுள் காலமும் நாளையுடன்(31) நிறைவடையவுள்ளதால் அறிக்கை முழுமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
உயர் நீதிமன்ற நீதிபதிகளான கே.ரி. சித்ரசிறி, பிரசன்ன சுஜீவ ஜயவர்தன மற்றும் ஓய்வு பெற்ற பிரதி அரச கணக்காய்வாளர் கந்தசாமி வேலுப்பிள்ளை ஆகியோர் இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஆவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply