பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும் :சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்

இடம்பெயர்ந்த, காயமடைந்த மற்றும் உடல் நலக் குறைவான பல்லாயிரக் கணக்கான பொது மக்களைப் பாதுகாக்க அனைத்து தரப்பினரும், உணவு மற்றும் மருந்து பொருட்களை அனுப்பிவைக்க வேண்டும் என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆசிய நாடுகளுக்கான திட்டத் துணைத் தலைவர் மோனிகா செனரெலி தெரிவித்துள்ளார். பல்லாயிரக் கணக்கான பொது மக்கள் தொடர்ந்தும் பாதுகாப்பு வலயத்தில் அபாயகரமான சூழலை எதிர்நோக்கியுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி முதல், சுமார் 12,400பேர் காயமடைந்த மற்றும் அவர்களின் உறவினர்களைப் புதுமாத்தளனில் இருந்து கப்பல் மூலம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அழைத்து வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

நேற்று முன்தினம் உலக உணவுத் திட்டம் வழங்கிய 30 தொன் உணவுப் பொருட்களையும் கப்பல் மூலம் ஏற்றிச் சென்றதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 100,000 பேர் வரை அரசக் கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கி வந்துள்ளனர்.அவர்களுக்கான அத்தியாவசிய சேவைகளை வழங்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தயாராக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply