இந்த ஆண்டின் இறுதியை மன் கி பாத் நிகழ்ச்சியுடன் நிறைவு செய்யும் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டின் இறுதியை நாட்டு மக்களுக்கு உரையாற்றும் மன் கி பாத் நிகழ்ச்சியுடன் நிறைவு செய்யவுள்ளார். மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி அமைந்ததும் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் மக்களுடன் கலந்துரையாடும் விதமாக மன் கி பாத் நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசி வருகிறார்.
இதற்கிடையே, பிரதமர் மோடி பேசும் 39-வது மன் கி பாத் நிகழ்ச்சி வானொலியில் இன்று ஒலிபரப்பாகிறது.
இந்நிலையில், ஒடிஷா மாநிலத்தின் பீஜப்பூர் சட்டசபை தொகுதியில் 270 பூத்களில் பிரதமரின் மன் கி பாத் பேச்சை கேட்க பா.ஜ.க.வினர், சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். இன்று நடைபெறவுள்ள மன் கி பாத் இந்த ஆண்டின் இறுதி நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, கடந்த மாதம் மன் கி பாத் நிகழ்ச்சியை, குஜராத் மாநிலத்தில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட இடங்களில் தேனீர் சாப்பிட்டபடி பிரதமரின் பேச்சை கேட்க நடவடிக்கை எடுத்த பா.ஜ.க. தொண்டர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்தது நினைவு கூரத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply