என் மேஜையில் தான் சுவிட்ச் உள்ளது: அமெரிக்காவுக்கு வட கொரிய அதிபர் அணுகுண்டு மிரட்டல்
புத்தாண்டையொட்டி வட கொரிய அதிபர் கிம் ஜாங்-யங் நேற்று நாட்டு மக்களுக்கு டெலிவிஷனில் உரை நிகழ்த்தினார்.அப்போது நாங்கள் அணு ஆயுத சோதனையில் தன்னிறைவு அடைந்து விட்டோம். எனது மேஜை மீது ஒரு ‘சுவிட்ச்‘ பொருத்தி இருக்கிறார்கள். அதை அழுத்தி உலகின் எந்த நாட்டை வேண்டுமானாலும் அணு குண்டு மூலம் என்னால் தாக்க முடியும். முக்கியமாக அமெரிக்காவை தாக்க முடியும் என்றார்.
மேலும் இந்த ஆண்டு வடகொரியாவில் நடைபெற இருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் குறித்தும் குறிப்பிட்டார். அதிலும் சில வில்லங்கமான தகவல்களை வெளியிட்டார். அதன்படி இந்த ஒலிம்பிக் போட்டியின் மூலம் மக்களுக்கு எங்கள் பலத்தை காட்டுவோம். உலகிற்கு நாங்கள் யார் என்று இனி தெரியும் என கூறினார்.
அவரது அப்பேச்சு வட கொரிய மக்களுக்கு பீதியை கிளப்பியுள்ளது தொடக்கத்தில் வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கு இடையில் மட்டுமே சண்டை இருந்து வந்தது. இரு நாடுகளும் பிரிந்த பிறகு அமெரிக்கா தென் கொரியாவுக்கு ஆதரவு அளித்து வருகிறது.
அன்றில் இருந்து இன்று வரை அமெரிக்காவை தனது எதிரியாக வடகொரியா கருதுகிறது. இவர்களின் சண்டையில் இடையில் மாட்டிக் கொண்டு தென் கொரியா முழிக்கிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply