நியூயார்க்கில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – 23 பேர் காயம்

நியூயார்க்கின் வேன் நெஸ்ட்டில் உள்ள பிரான்க்ஸ் விலங்குகள் பூங்கா மிகவும் பிரபலமானது. இந்த பூங்காவிற்கு அருகில் பிரான்க்ஸ் என்ற அடுக்கு மாடி கட்டிடம் அமைந்துள்ளது. இதில் 12 குடியிருப்புகள் இருந்துள்ளது. நேற்று அதிகாலை உள்ளூர் நேரப்படி சுமார் 5:30 மணியளவில் இந்த கட்டிடத்தின் முதல் தளத்தில் இருந்து கரும்புகை வெளியேறியுள்ளது. இதனையடுத்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் கிடைத்த சில நிமிடங்களில் 200க்கும் மேற்பட்ட தீயணைப்புத் துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும் அதிகாலை நேரம் என்பதோடு கரும்புகை அதிக அளவில் இருந்ததாலும் தீயை அணைப்பது சிரமமாக இருந்துள்ளது. கடும் போராட்டத்துக்கு பின்னர் தீயை அணைத்துள்ளனர். முதல் தளத்தில் இருந்த மரச்சாமான் கடையில் இருந்து தீ பற்றி எரிந்து மற்ற தளங்களுக்கும் பரவியுள்ளதாக தெரிகிறது.

இந்த தீயணைக்கும் பணியில் ஈடுபட்ட 19 தீயணைப்பு வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் சுமார் 7 குழந்தைகள் உட்பட 23 பேருக்கு கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 29-ம் தேதி நியூயார்க் நகரையே உலுக்கி போட்ட ஒரு தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் மீண்டும் ஒரு தீ விபத்து நடந்திருப்பது அந்தப் பகுதியினரை அச்சமடைய வைத்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply