உணவுப் பொருள்களைப் பெற முண்டியடிக்கும் மக்கள்

வன்னியிலிருந்து இடம் பெயர்ந்த மக்கள் நீண்டநாட்களாக போதியளவு உணவின்றி பசியுடன் இருப்பதால் உணவுப் பொருள்களைப் பெற்றுக் கொள்வதற்கு முண்டியடிப்பதால் சிலர் காயங்களுக்கு உள்ளாவதாகத் தெரியவருகிறது. முகாம்களிலுள்ளவர்களுக்கான உணவுப் பொருள் களையோ அல்லது தண்ணீர் போத்தல்களையோ விநியோகிக்க வாகனமொன்று சென்றால் அதன் பின்னால் ஓடும் மக்கள் அவற்றைப் பெற்றுக்கொள்வதற்கு முண்டியடிப்பதாகவும், இந்த நெரிசலில் சிக்குண்டு சிலர் காயமடைந்திருப்பதாகவும் அரசசார்பற்ற நிறுவனத்;தைச் சேர்ந்த ஒருவர் கூறினார். இவ்வாறான நெரிசலில் சிக்குண்டு அண்மையில் கைக்குழந்தை யொன்று உடல்சிதறிப் பலியானதாகவும் அவர் தெரிவித்தார்.

“பசியால் மக்கள் மிருகமாகிவிட்டார்கள்” என அந்த அரசசார்பற்றப் பணியாளர் மிகவும் கவலையுடன் கூறினார்.

அதேநேரம் உணவுப் பொருள்கள் மற்றும் தண்ணீர் போத்தல்களை விநியோகிப்பவபர்களும் சரியானமுறையில் அதனைச் செய்வதில்லையென்ற குற்றச்சாட்டும் எழுகிறது. குறிப்பாக தண்ணீர் போத்தல்களை வீசியெறியும் போது அதனை ஏந்துவதற்காக மக்கள் ஒருவருடன் ஒருவர் மோதுவதாகத் தெரியவருகிறது.

இவ்வாறு முண்டியடித்து உணவுப் பொருள்களைப் பெறுவதால் பட்டினியால் பலவீனமடைந்திருக்கும் முதியவர்களுக்கோ அல்லது சிறுவர்களுக்கோ உணவுப் பொருள்கள் சென்றடைவதில்லையெனவும் கூறப்படுகிறது. இதேவேளை, உணவுப் பொருள்கள் கிடைக்கப்பெறாத மக்களைத் தேடியறிந்து தாம் உணவுப் பொருள்களை வழங்கிவருவதாக அரசசார்பற்ற நிறுவனமொன்று எம்மிடம் கூறியது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply