அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் நிலநடுக்கம்

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மாகாணத்தில் ரிக்டர் அளவுக்கோலில் 4.5 அலகுகளாக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சான் பிரான்சிஸ்கோ மாகாணத்தின் கடற்கரை நகரமான பெர்க்லியில் இருந்து வடமேற்கு திசையில் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் பூமிக்கு அடியில் சுமார் 13 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 4.5 அலகுகளாக பதிவானதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி அதிகாலை 2:39 மணியளவில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலநடுக்கத்தால் தூக்கத்தில் இருந்த மக்கள் அதிர்ச்சியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். இருப்பினும் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply