நடுவானில் பறந்தபோது விமானத்தில் பெண் பயணியை மானபங்கம் செய்த இந்தியர் கைது
அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் இருந்து பயணிகள் விமானம் ஒன்று டெட்ராய்ட் நகருக்கு நேற்று முன்தினம் இரவு புறப்பட்டுச் சென்றது. அதில் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக பணிபுரியும் இந்தியரான பிரபு ராமமூர்த்தி(வயது 34) என்பவர் தனது மனைவியுடன் பயணம் செய்தார்.விமானம் நடுவானில் பறந்தபோது தன் அருகில் அமர்ந்திருந்த 22 வயது பெண் பயணியின் ஆடையை அவிழ்த்து பிரபு ராமமூர்த்தி மானபங்கம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதுபற்றி விமான ஊழியரிடம், அந்த பெண் புகார் செய்தார்.
விமானம் தரையிறங்கியதும் ராமமூர்த்தியை டெட்ராய்ட் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் மிச்சிகன் மாகாண கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்ணின் வக்கீல், ‘‘இதுபோன்ற ஆண்கள் விமான பயணம் செய்ய தகுதியானவர்கள் அல்ல. இவர்களால் பிற பெண் பயணிகளுக்கு ஆபத்து ஏற்படும்’’ என்று வாதிட்டார்.
பிரபு ராமமூர்த்தி வாதிடுகையில், விமானம் பறந்தபோது தான் தூக்க மாத்திரை சாப்பிட்டு ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததாகவும், தான் அந்த பெண்ணை எதுவும் செய்யவில்லை என்றும் கூறினார்.எனினும் அவருடைய வாதத்தை ஏற்க மறுத்த கோர்ட்டு அவரை ஜாமீனில் விடுவிக்க மறுத்துவிட்டது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply