கல்முனை மாநகரசபையின் த.தே.கூட்டமைப்பு வேட்பாளர்களின் ஆதரவு அதிகரிப்பு
கல்முனை மாநகரசபைக்காக த.தே.கூட்டமைப்பு சார்பில் 11ஆம் 12ஆம் வட்டாரங்களுக்கு போட்டியிடும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் உப தலைவரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான ஹென்றி மகேந்திரன், சந்திரசேகரம் ராஜன், கு.ஏகாம்பரம் ஆகியோர் நேற்று மாலை கல்முனை 1ஆம் குறிச்சி தமிழ் மக்களை கடற்கரையில் சந்தித்து கலந்துரையாடினர்.
கடந்த காலத்தில் தமக்கு தமிழ் பிரதிநிதிகளால் இழைக்கப்பட்ட பாராபட்சம் அநீதி காரணமாகவே தாம் ஜ.தே.கட்சி பக்கம் சார்ந்து ஆதரவளித்ததாக குறித்த தமிழ் மக்கள் தமது விசனத்தைத் தெரிவித்தனர்.
வேட்பாளர்கள் பதிலளிக்கையில் கடந்தது கடந்ததே என்றும் மாநகரசபையால் செய்யக்கூடிய திட்டங்கள் தொடர்பாக விரிவாக எடுத்துக்கூறி தம்மால் இவற்றைச் செய்யமுடியும் என்றும் தமது கட்சிக்கு ஆதரவளிக்குமாறு அன்பாகக் கேட்டுக்கொண்டதற்கு அந்த மக்கள் செவி சாய்த்தனர்.
சுனாமியால் முதன்முதலில் மிகமோசமாக பாதிக்கப்பட்ட தமக்கு தரப்பட்ட வீடு மிக மோசமான நிலையிலுள்ளதாகவும் இதனை
திருத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
வேட்பாளர்கள் உடனே கல்முனை தமிழ்ப் பிரதேச செயலாளர் க.லவநாதனிடம் தொடர்பு கொண்டு இதுவிடயம் தொடர்பாக கதைத்த போது நடவடிக்கை எடுப்பதாகக்க குறிப்பிட்டார்.
அதைனையடுத்து இம்முறை அவர்கள் த.தே.கூட்டமைப்புக்கு ஆதரவளிக்கப்போவதாக உறுதியளித்தனர். ஜ.தே.கட்சி ஆதரவாளர்களாக இருந்த கல்முனை 1ஆம் குறிச்சி மக்கள் இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவளிக்கப்போவதாக உறுதியளித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply