சீனா அருகே நடுக்கடலில் சரக்கு கப்பல்கள் மோதி தீ விபத்து: 32 பேர் மாயம்
ஈரான் நிறுவனத்துக்கு சொந்தமான பனாமா நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு சரக்கு கப்பல் ஈரான் நாட்டில் இருந்து சுமார் 1,36,000 டன் அளவுக்கு இருந்து பெட்ரோலிய கச்சா எண்ணையை ஏற்றிகொண்டு தென் கொரியா நாட்டுக்கு புறப்பட்டு சென்றது.சுமார் 274 நீளமுள்ள இந்த கப்பல் சீனாவின் தொழில்நகரமான ஷங்காயில் இருந்து சுமார் 160 கடல் மைல் தொலவில் சென்று கொண்டிருந்தபோது அமெரிக்காவில் இருந்து சீனாவின் குவாங்டாங் நகருக்கு சுமார் 64 ஆயிரம் டன் உணவு தாணியங்களை ஏற்றிவந்த ஹாங்காங் சரக்கு கப்பலின்மீது (சீன நேரப்படி) நேற்றிரவு 8 மணியளவில் பயங்கரமாக மோதியது.
மோதிய அதிர்ச்சியில் ஈரான் நாட்டு எண்ணைய் கப்பல் தீபிடித்து எரிய தொடங்கியது. அதில் வந்த வங்காளதேசம் நாட்டை சேர்ந்த இருவர் மற்றும் 30 ஈரான் நாட்டினர் என மொத்தம் 32 பேரின் கதி என்ன ஆனது? என்று தெரியவில்லை. ஹாங்காங் நாட்டு கப்பலின் பெரும்பகுதியும் தீயில் எரிந்து நாசமானது. அதில் வந்த 21 பேரை சீன கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டனர்.
எண்ணைய் கப்பலில் வந்து காணாமல்போன 32 பேரை தேடும் பணிக்காக சீனாவில் இருந்து 8 கப்பல்களும், தென்கொரியாவில் இருந்து ஒரு விமானம் மற்றும் கடலோர காவல்படை கப்பலும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply