பேதங்களை இல்லாதொழிக்க தைப்பொங்கல் பண்டிகை முன்மாதிரியாகட்டும்:பிரதமர்

இன மத பேதங்களைத் தாண்டி சமாதானம் சதோதரத்துவம் மேலோங்கும் மனித சமூகமொன்றை உருவாக்க இம்முறை தைப்பொங்கல் பண்டிகை முன்மாதிரியாக அமைய வேண்டுமெனப் பிரார்த்திப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.தைப் பொங்கல் பண்டிகைக்கான வாழ்த்துச் செய்தியில் பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.

இலங்கை மக்களது வாழ்க்கையை முன்னேற்றிச் செல்லும் இத்தருணத்தில் இலங்கை மற்றும் உலகெங்குமுள்ள தமிழா்கள் உவகையுடன் கொண்டாடும் இப்பொங்கல் திருநாளானது மகிழ்ச்சிகரமாக, நன்றி செலுத்துகின்ற, மற்றும் மீளமைப்பிற்கான மக்கள் திருநாளாக அமைந்து, தமிழ் மக்களும், ஏனைய சமூகத்தவா்ககளும் ஒன்றுபட்டு எதிர்கால இலங்கையின் சமாதானத்திற்காக உறுதிபூணும் ஒர் தேசிய நல்லிணக்க தினமாக அமைகின்றது.

உலகத்தின் மிகப் பழமையான நாகரிகத்தைக்கொண்ட தமிழர்கள், உழவுத் தொழிலைப் போற்றி, எருதுகள், கால்நடைகளுக்கும் இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கின்ற வகையில், அறுவடைத் திருநாளைத் தைப்பொங்கல் திருவிழாவாக நெடுங்காலமாகக் கொண்டாடி வருகின்றனர்.

இயற்கையின் பெறுமதி சமத்துவத்திற்கு மதிப்பளிக்க வேண்டியதன் முக்கியத்துவம், நன்றி தெரிவிக்கும் உயரிய பண்பு போன்ற அனைத்து மதங்களினதும் மனித நேயக்கருத்துக்களை தைப்பொங்கல் பண்டிகை எமக்கு எடுத்தியம்புகின்றது.

தமிழர்கள் இன மத பேதமின்றி அனைத்து மக்களுடனும் ஒன்றினைந்து தைப்பொங்கல் திருவிழாவைக் கொண்டாடுதலானது சமாதானம் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான முக்கிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகின்றது.

தைப் பொங்கல் பண்டிகையைக் கொண்டிடும் சகோதர தமிழ் மக்களுக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துக்களைத்தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் இச்செய்தியில் பிரதமர் மேலும் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply