இராணுவத்தால் தமிழ் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பாதிப்பு

வடக்கில் இராணுவம் நிலைக்கொண்டுள்ளதால், தமிழ் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ் விடுதலை கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி இதனைத் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்று ஊடகவியலாளர்களைச் சந்தித்த அவர் இதனைக் குறிப்பிட்டார்.

யுத்ததால் பெரும் பாதிப்புக்களை சந்தித்துள்ள வடக்கு தமிழ் மக்கள் தற்போதைய நிலையிலும் நிம்மதியாக வாழ முடியாத சூழ்நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தம் ஒன்று இடம்பெறாத நிலையிலும் இராணுவத்தினர் வடக்கில் தங்கியிருக்கின்றமையால் தமிழ் மக்களுக்கு சொந்தமான பாரியளவான காணிகள் மக்கள் பயன்பாட்டுக்கு கொள்ள முடியாமல் உள்ளதாகவும் ஆனந்த சங்கரி குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply