வெளியேறும் முடிவை திரும்பப்பெற வேண்டும்: பிரிட்டனுக்கு ஐரோப்பிய கவுன்சில் தலைவர் கோரிக்கை
ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் பாராளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை ஆதரித்து அதிகம் பேர் வாக்களித்தனர். இதையடுத்து, வரும் 29-3-2019-க்குள் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்து செல்வதற்கான ஆயத்தப் பணிகளில் பிரிட்டன் பிரதமர் தெரசா மே மும்முரம் காட்டி வருகிறார்.
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் ஸ்ட்ராஸ்போர்க் நகரில் இன்று ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களிடையே பேசிய ஐரோப்பிய யூனியன் நாடுகள் குழுவின் தலைவர் டொனால்ட் டஸ்க், ‘நமது பிரிட்டன் நண்பர்களின் மனங்களில் எவ்வித மாற்றமும் ஏற்படாமல் ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக வேண்டும் என்ற முந்தைய முடிவில் அவர்கள் உறுதியாக இருந்தால் பல எதிர்மறை விளைவுகளுடன் அது நடந்தேறலாம்’ என்று குறிப்பிட்டார்.
மனமாற்றத்தை ஏற்றுக்கொள்ளாத ஜனநாயகத்தை ஜனநாயகம் என்று கூற முடியாது. ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாங்கள் எங்கள் மனதை மாற்றிக்கொள்ளவில்லை. எங்கள் இதயங்கள் உங்களுக்காக இன்னும் திறந்தே உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த ஐரோப்பிய ஆணைய தலைவர் ஜீன்-கிளாட் ஜங்க்கர், ‘இங்கு நீங்கள் பேசியது லண்டனுக்கு கேட்டிருக்கும் என நம்புகிறேன்’ என்று கூறினார்.
பெல்ஜியம் நாட்டில் உள்ள புருசெல்ஸ் நகரில் அமைந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ஐரோப்பிய யூனியனுக்கு உட்பட்ட 28 உறுப்பு நாடுகளை சேர்ந்த 751 உறுப்பினர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களின் சார்பில் டொனால்ட் டஸ்க் இன்று தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply