துர்க்மெனிஸ்தான் நாட்டில் கருப்பு நிற காருக்கு தடை

சோவியத்ரஷ்யாவில் இருந்து பிரிந்த நாடு துர்க்மெனிஸ்தான். இதன் தலைநகரான அஸ்காபாத்தில் கருப்பு நிற கார்கள் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.அதையும் மீறி ஓட்டினால் கருப்பு நிற கார் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. காரின் நிறத்தை வெள்ளையாக மாற்றி விடுவதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால்தான் கார்கள் திரும்ப ஒப்படைக்கப்படுகின்றன.

கடந்த ஜனவரி 1-ந் தேதி புத்தாண்டு முதல் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. போலீசாரின் இச்செயல் கருப்பு நிற கார் வைத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கார் நிறம் மாற்றத்துக்கு அதிபர் குர்பங்குலி பெர்டிமுகமே தோவ் காரணம் என கருதப்படுகிறது. இவருக்கு வெள்ளை நிறம் ராசியாக உள்ளது. இவர் அதிபராவதற்கு முன்பு பல் டாக்டராக இருந்தார்.

தற்போது இவர் தனது வீடு, அலுவலகத்தை வெள்ளை நிற மார்பிளில் மாற்றி விட்டார். வெள்ளை குதிரைகளை வைத்துள்ளார். வெள்ளை ஆடைகளை அணிகிறார். வெள்ளை தரை விரிப்புகள், வெள்ளை பூக்கள் நிறைந்த ஜாடிகள் என எங்குமே வெள்ளை நிறமாக காட்சி அளிக்கிறது.

கார்களில் நிறம் மாற்ற வேண்டும் என்ற அரசின் உத்தரவால் வெள்ளை பெயிண்டின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது. பொதுவாக இங்கு கார்களில் நிறம் மாற்ற ரூ.2½ லட்சம் செலவாகும். இப்போது 4 லட்சம் கேட்கின்றனர்.

கார்களில் நிறம் மாற்ற அதிக செலவு ஆவதால் அதிபர் மீது பொதுமக்கள் கடும் ஆத்திரத்தில் உள்ளனர். அதிர்ஷ்டம் என்றால் நிறத்தை அவர் மாற்றிக் கொள்ள வேண்டியதுதானே. மக்களை ஏன் கஷ்டப்படுத்துகிறார் என முணுமுணுக்கின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply