எல்லையில் துப்பாக்கிச்சூடு: இந்தியத் தூதரை நேரில் அழைத்து பாகிஸ்தான் கண்டனம்
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்தியா அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக கூறி அந்நாட்டுக்கான இந்திய தூதரை நேரில் அழைத்து பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் சமீப காலமாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு, இந்திய தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்திய படைகள் அத்துமீறி தாக்குவதாக கூறி பாகிஸ்தானுக்கான இந்திய தூதரை நேரில் அழைத்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானுக்கான இந்தியத் துணைத் தூதர் ஜே.பி. சிங், வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு நேரில் வர வழைக்கப்பட்டு,
அவரிடம் இந்திய ராணுவம் எல்லையில் அத்துமீறி நடத்தி வரும் தாக்குதல்கள் குறித்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
2018-ஆம் ஆண்டில் மட்டும் இந்திய ராணுவம் அமைதி ஒப்பந்தத்தை மீறி 110 முறை பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், இதில் 3 பேர் உயிரிழந்துவிட்டனர், 10 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த 2017-ஆம் ஆண்டில் மட்டும் 1900 அத்துமீறல்களை இந்தியா நடத்தியுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply