‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு – சுப்பிரமணிய சாமி முக்கிய ஆதாரம் தாக்கல்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவரது தாயார் சோனியா உள்ளிட்டவர்களுக்கு எதிராக பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி, டெல்லி மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஒரு வழக்கு தொடுத்து உள்ளார்.அதில் அவர், முதல் பிரதமர் நேருவால் தொடங்கப்பட்ட ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையின் ரூ.90 கோடி சொத்துகளை ராகுல், சோனியா உள்ளிட்டவர்கள் வெறும் ரூ.50 லட்சம் மட்டுமே கொடுத்து ‘யெங் இந்தியன் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனத்தின் பெயரால் பறித்துக்கொண்டு உள்ளதாக கூறி உள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக அவர்களுக்கு ரூ.414 கோடியை வருமான வரித்துறை அபராதமாக விதித்து உள்ளதாக கூறி அது குறித்த முக்கிய ஆவணங்களை கோர்ட்டில் சுப்பிரமணியசாமி நேற்று தாக்கல் செய்தார்.

இதற்கு ராகுல், சோனியா தரப்பு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக ஒரு மனு தாக்கல் செய்யப்போவதாகவும் கூறினார். இதையடுத்து சுப்பிரமணிய சாமி தாக்கல் செய்த வருமான வரித்துறை ஆவணங்களை ஒரு உறையில் போட்டு மூடி முத்திரையிட்டு பாதுகாக்குமாறு மாஜிஸ்திரேட்டு அம்பிகா சிங் உத்தரவிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply