கொழும்பு விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு பிரிவு

பன்றிக் காய்ச்சல் பரவியுள்ள நாடுகளிலிருந்து இலங்கை வரும் வெளிநாட்டு உள்நாட்டு பயணிகள் வருகை தொடர்பாக தீவிர கண்காணிப்புப் பிரிவொன்றின் ஊடாக தரவுகள் சேகரிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் முகாமையாளர் எச். எஸ். ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.விமான நிலையத்தின் பயணிகள் வருகை பகுதியில் இத்தீவிர கண்காணிப்புப் பிரிவு இயங்குவதாக குறிப்பிட்ட அவர் மெக்சிகோ, அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், நியூசிலாந்து, கனடா, இஸ்ரேல், ஓஸ்ரியா போன்ற நாடுகளிலிருந்து பயணிகள் வரும்போது கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.

பன்றிக் காய்ச்சல் பீடிக்கப்பட்ட ஒருவர் வருவாரேயானால் உடனடியாக அவரை பாதுகாப்பாக இதற்கென ஒதுக்கப்பட்ட ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பன்றிக்காய்ச்சல் தொடர்பாக விமான நிலைய ஊழியர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சித் திட்டம் ஒன்றும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக விமான நிலைய முகாமையாளர் எச். எஸ். ஹெட்டயாராச்சி தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply