ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு உதவிய ஜெர்மனி பெண்ணுக்கு ஈராக்கில் தூக்கு தண்டனை

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் அதிகரித்து இருந்தது. மொசூல் உள்ளிட்ட பகுதிகளை கைப்பற்றி தனிநாடு அமைத்து அரசாங்கம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் அமெரிக்கா உதவியுடன் ஈராக் ராணுவம் தீவிரவாதிகளுடன் போரிட்டு கடந்த ஆண்டு ஜூலையில் மொசூல் உள்ளிட்ட பகுதிகளை கைப்பற்றியது.

3 ஆண்டுகளுக்கு பிறகு மொசூல் நகரம் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அங்கு ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் ஜெர்மனியை சேர்ந்த ஒரு பெண் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு உதவியதாக கைது செய்யப்பட்டார்கள். மொராக்கோவை பூர்வீகமாக கொண்ட இவள் ஜெர்மனியில் இருந்து சிரியா சென்று அங்கிருந்து ஈராக் வந்தாள்.

அங்கு மொசூல் சென்ற அவள் தீவிரவாதியை திருமணம் செய்தாள். ஏற்கனவே அவளுக்கு 2 மகள்கள் உள்ளனர். தீவிரவாதியுடன் தங்கியிருந்த அவள் வன்முறைக்கு உதவி செய்தாள் என குற்றம் சாட்டப்பட்டது.

அவள் மீது பாக்தாத் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு அவளுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply