இந்தோனேசிய ஜனாதிபதி இலங்கை வருகின்றார்.!
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இந்தோனேசிய ஜனாதிபதி ஜக்கோ விதோதோ நாளை 24 ஆம் திகதி புதன்கிழமை இலங்கை வரவுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பிற்கிணங்க இந்தோனேஷிய ஜனாதிபதி இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இவ்விஜயத்தின் போது இலங்கை மற்றும் இந்தோனேஷியா ஆகிய இரு நாட்டு தலைவர்களுக்கிடையிலான உத்தியோக பூர்வ சந்திப்பு இடம்பெறவுள்ளது. அத்தோடு பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரையும் இந்தோனேஷிய ஜனாதிபதி சந்திக்கவுள்ளார்.
இச் சந்திப்பின் போது, இந்தோனேஷியா இலங்கைக்கிடையிலான இரு தரப்பு உறவுகள் பற்றி கலந்துரையாடப்படவுள்ளதோடு இவ் விடயம் தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இதே வேளை இரு தரப்பு உறவுகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளன. இரு தரப்பு புரிந்துணர்வு விடயங்கள் தவிர்ந்து பொருளாதாரம் வர்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் பேச்சுவார்த்தை கள் நடத்தப்படவுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply