வார இறு­தியில் 98 இந்­திய மீன­வர்கள் விடு­விப்பு

எல்லை மீறி மீன்­பிடித் தொழிலில் ஈடு­பட்டு வந்த குற்­றச்­சாட்டின் பேரில் கடந்த வருட இறு­தியில் சிறைப்­பி­டிக்­கப்­பட்ட 98 இந்­திய மீன­வர்­களை இந்த வார இறு­தியில் விடு­விக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. இவர்கள் உள்­ளிட்ட 113 பேர் இது வரையில் இலங்கை சிறையில் இருப்­ப­தாக கடற்­றொழில் மற்றும் நீரியல் வள திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.

இது குறித்து மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

எல்லை மீறி மீன் பிடித்­தொ­ழிலில் ஈடு­பட்டு வந்த குற்­றச்­சாட்டின் பேரில் இது­வ­ரையில் 113 இந்­திய மீன­வர்கள் இலங்கை சிறையில் உள்­ளனர். அவர்­களில் 98 பேர் இவ்­வார இறு­தியில் விடு­தலை செய்­யப்­பட சட்ட நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

இவர்கள் அனை­வரும் காங்­கே­சன்­துறை, யாழ்ப்­பாணம் மற்றும் பருத்­தித்­துறையை அண்­மித்த கடற்­ப­ரப்பில் எல்லை மீறி மீன்­பி­டியில் ஈடு­பட்ட குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளாவர்.

மேலும் இம்­மாத தொடக்­கத்தில் 69 பேர் விடு­தலை செய்­யப்­பட்­ட­துடன், இன்னும் 16 பேர் இக்­குற்­றச்­சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்டோர் சிறைச்சாலைகளில் உள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply