மனிதாபிமான நடவடிக்கையின் இரண்டாவது கட்டம்
அரசாங்கத்தின் மனிதாபிமான நடவடிக்கை புலிகளுக்கு எதிரான இராணுவச் செயற்பாடுகளுடன் முடிவடையவில்லை. நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதே மனி தாபிமான நடவடிக்கையின் பிரதான நோக்கம். புலிகளின் செயற்பாடுகள் அமைதிக்குத் தடையானவை. குண்டு வெடிப்புகள் மூலமும் தற்கொலைத் தாக்குதல்கள் மூலமும் பொதுமக்களின் அமைதியை இவர்கள் குலைத்து வந்தனர். நாட்டின் நிரந்தர அமைதிக்குத் தேவையான அரசியல் தீர்வுக்குத் தடையாகத் தொடர்ச்சியாகச் செயற்பட்டு வந்தனர். இந்த நிலையில் மனிதாபிமான நடவடிக்கையில் முதலாவது இலக்கு புலிகளாக இருந்ததில் நியாயமுண்டு.
புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை இப்போது முடிவுக்கு வந்திருக்கின் றது. மிகக் குறுகிய நிலப்பரப்பில் பொது மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படு த்தி மறைந்திருக்கும் புலிகள் நீண்டகாலம் இவ்வாறு மறைந்திருப்பது சாத்தியமில்லை. விரைவில் அவர்கள் சரணடையாவிட்டால் மரணத்தைத் தழுவுவது நிச்சம்.
இராணுவ நடவடிக்கை முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், மனிதாபிமான நடவடிக்கையின் இரண்டாவது கட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்திருக்கின்றது. அமைதியை ஏற்படுத்துவதே இரண்டாவது கட்டம். அதற்கான செயற்பாடுகள் ஆரம்பமாகியுள்ளன. முசலியில் இடம்பெற்ற மீள்குடியேற்றம் இரண் டாவது கட்டத்தின் ஒரு அம்சம்.
நாட்டில் அமைதி நிலவுவதற்கான முன் தேவை மக்கள் தங்கள் சொந்த இடங்களில் குடியமர்வதாகும். இராணுவ நடவடிக்கை காரணமாக வெளியேறிய முசலி மக்கள் இப்போது அங்கு குடியமர்த்தப்பட்டுள்ளனர். அண் மைய இராணுவ நடவடிக்கை காரணமாக வன்னிப் பிரதேசத்திலிருந்து வெளியேறி நிவாரணக் கிராமங்களில் வாழும் மக்களை மீள் குடியேற்றுவது அடுத்து இடம்பெற வேண்டியுள்ளது. இம் மக்கள் தங்கள் சொந்த இடங்களில் மீளக் குடியேறுவதற்கு முன் அங் குள்ள கண்ணிவெடிகள் அனைத்தும் அகற்றப் படவேண்டும். டிசம்பர் மாதம் 31ந் திக திக்கு முன் இம்மக்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்றுவதற்கான இலக்குடன் அரசாங்கம் செயற்படுவதாக வெளி விவகார அமைச்சர் அண்மையில் கூறினார். மீள்குடியேற்றம் இடம்பெறும் வரை இம் மக்களுக்குத் தேவையான வசதிகள் அனைத்தையும் செய்து கொடுக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து அரசாங்கம் செயற்படுகின்றது. நிவாரணக் கிராமங்களில் வாழும் மக்களின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதில் அனர்த்த நிவாரண மற்றும் மீள்குடி யேற்ற அமைச்சு அர்ப்பணிப்புடன் செயற்ப டுகின்றது. கண்ணி வெடிகள் அகற்றப்பட்ட பின் இம்மக்கள் தங்கள் சொந்த இடங் களில் குடியேற்றப்படுவார்கள்.
இராணுவ நடவடிக்கை காரணமாக வெளியேறியவர்கள் மாத்திரமன்றி வேறு காரணங்களால் இடம் பெயர்ந்தவர்களும் தங்கள் சொந்த இடங்களில் குடியேறுவதற்கான சூழ்நிலை உருவாக வேண்டும். வட மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் புலிகளால் வெளியேற்றப்பட்டு இன்று வெவ்வேறு இடங்களில் வாழ்கின்றார்கள். அதேபோல, புலிகளின் ஆயுதப் போராட்டத்தின் விளை வாகத் தமிழ் மக்களும் வட பகுதியிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள்.
நாட்டில் நிரந்தரமான அமைதியை அரசியல் தீர்வின் மூலமே அடைய முடியும். அரசியல் தீர்வு ஒரே நாளில் கிடைக்கக் கூடிய தல்ல. அதற்கான சூழ்நிலை உருவாக்கப்படல் வேண்டும். மக்கள் அவர்களின் சொந்த இடங்களில் குடியேறியதும் அப்பிரதேசங்க ளில் ஜனநாயக நடைமுறையைக் கொண்டு வருவது அரசியல் தீர்வின் பிரதானமான முன் தேவை. வட மாகாணத்தில் மாகாண சபை செயற்படவில்லை. அம் மாகாணத்தின் பல பகுதிகளில் உள்ளூராட்சி சபைகளும் செயற்பட வில்லை. இவற்றை முதலில் செயற்படுத்த வேண்டும். அதைத் தொடர்ந்து அரசியல் தீர்வுப் பேச்சுவார்த்தை இடம்பெற வேண்டும். தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இப்போது உரிமை கோருபவர்கள் பேச்சு வார்த்தையில் பங்குபற்றாமல் ஒதுங்குவார்களேயானால் புதியதொரு தலைமைத்துவத்துடன் அரசாங்கம் பேசி அரசியல் தீர்வை நடைமுறைப்படுத்த வேண்டும். அப்போது தான் மனிதாபிமான நடவடிக்கையின் இரண்டாவது கட்டம் பூர்த்தி பெறும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply