பாகிஸ்தானில் மதஅவமதிப்பில் ஈடுபட்ட பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற பிளஸ் 2 மாணவன்

பாகிஸ்தானில் கைபர் பக்துன்கலா மாகாணத்தில் உள்ள சார்பத்தா நகரை சேர்ந்தவன் பாகீம் (18). இவன் அங்குள்ள பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறான்.நேற்று இவன் தான் படிக்கும் பள்ளியின் முதல்வர் சரீர் என்பவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான். தகவல் அறிந்ததும் பள்ளிக்கு வந்த போலீசார் அவனை கைது செய்தனர்.பின்னர் அவனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பள்ளி முதல்வர் மத அவமதிப்பில் ஈடுபட்டதாகவும் எனவே ஆத்திரத்தில் சுட்டுக் கொன்றதாகவும் தெரிவித்தான்.

கடந்த ஆண்டு நவம்பரில் மத அவமதிப்பில் ஈடுபட்ட சட்டத்துறை மந்திரி ஷாகித் ஹமீத் பதவி விலக வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பாகிம் 3 நாட்கள் பள்ளிக்கு வரவில்லை அது குறித்து பள்ளி முதல்வர் சரீர் விசாரித்த போது அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பாகிஸ்தானில் மத அவ மதிப்பு பெரும் குற்றமாக கருதப்படுகிறது. இதனால் பலர் அடித்து கொல்லப்படுகின்றனர். கடந்த 1990-ம் ஆண்டு முதல் இதுவரை 65 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் இச்சட்டத்தின் கீழ் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையும் வழங்கப்பட்டு வருகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply