பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உலக நாடுகள் உதவி

யுத்த சூழ்நிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க நோர்வே, இந்தியா, சுவிஸ், ஜப்பான் ஆகிய நாடுகள் முன் வந்துள்ளன. நோர்வே சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா. அமைப்புகள், உள்நாட்டு மற்றும் சர்வதேச தன்னார்வ தொண்டர் அமைப்புகள் ஊடாக 10 மில்லியன் அமெரிக்க டொலர் உதவியை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக நோர்வே உயர் ஸ்தானிகராலயப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். தேவை ஏற்படின் மேலும் உதவிகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். நோயாளர்களுக்குத் திருப்தியான சேவையை வழங்க குறைந்தது 1000 படுக்கைகள் தேவைப்படுவதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவிக்கின்றார்.

ஏற்கனவே திருகோணமலை புல்மோட்டையில் தள வைத்தியசாலையொன்றையும், மருத்துவர்களையும் மருத்துவ உதவிகளையும் வழங்கி உதவியுள்ள இந்தியா, மேலும் ஒரு பில்லியன் ரூபா பெறுமதியான உதவிகளை வழங்க முன் வந்துள்ளது .இதன் பிரகாரம் 40 ஆயிரம் குடும்பங்களுக்குரிய உதவிப் பொதிகள் ஏற்கனவே இடம்பெயர்ந்தோருக்கு வழங்கப்பட்டுள்ளதோடு மேலும் 50 ஆயிரம் பொதிகள் விரைவில் வந்தடையவிருப்பதாக இந்திய உயர்ஸ்தானிகராலய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இடம் பெயர்ந்துள்ள மக்களின் உடனத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ஜப்பான் 4 மில்லியன் அமெரிக்க டொலர் உதவியை வழங்க முன் வந்துள்ளது. அதனை யு.என்.எச்.சி.ஆர் ,ஐ.சி.ஆர்.சி., யுனிசெப், புலம் பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பு ஆகியவற்றின் ஊடகவே வழங்கத் தீர்மானித்துள்ளது.

அவசர மனிதாபிமான உதவிகளுக்காக 1.23 மில்லியன் அமெரிக்க டொலர் உதவிகளை வழங்க சுவிஸ் முன்வந்துள்ளது. ஐ.சி.ஆர்.சி., உலக உணவுத் திட்டம், மற்றும் யு.என்.எச்.சி.ஆர். ஆகியன ஊடாகவே இதனை வழங்கப் போவதாக அது அறிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply