பாகிஸ்தானில் இமயமலை சிகரத்தில் ஏறிய போலந்து வீரர் மரணம்

பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கில்கிட்-பல்டிஸ்தான் பகுதியில் உள்ள இமய மலையில் நங்கா பர்வத் சிகரம் உள்ளது. ‘கொலைகார மலை’ என அழைக்கப்படும் இச்சிகரத்தில் மலையேறும் வீரர்கள் தீவிர முயற்சியுடன் ஏறி வருகின்றனர்.சமீபத்தில் போலந்து நாட்டை சேர்ந்த தாமஸ் மாகிவிஷ், பிரான்சை சேர்ந்த எலிசபெத்ரெவோல் ஆகியோர் இந்த மலை சிகரத்தில் ஏறினார்கள். 7600 மீட்டர் உயரத்தில் ஏறிய போது தட்பவெப்பநிலை மாறியது. உறைபனி அளவுக்கு சென்றதும் பனிக்காற்று வீசியது.

இதனால் அவர்கள் இருவரும் மலையேறும்போது மாயமானார்கள். அதை தொடர்ந்து அவர்களை தேடும் பணியில் ராணுவ ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன. அவர்களின் தீவிரமான தேடுதலுக்கு பிறகு நங்கபர்வத சிகரத்தில் இருந்து பிரான்ஸ் வீரர் எலிசபெத் ரெவோல் பத்திரமாக மீட்கப்பட்டார்.

ஆனால் போலந்து வீரர் தாமஸ் மாத்திவிஸ் இறந்த நிலையில் பிணமாக கிடந்தார். அங்கிருந்து அவரது உடலை மீட்டு கொண்டுவர முடியவில்லை.

ஏனெனில் தட்ப வெப்பநிலை மிக மோசமாக இருந்ததால் 7400 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே எடுத்து வர முடியவில்லை. என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply