பிரான்ஸ்-ஸ்பெயின் இடையே 6 மாதத்துக்கு ஒரு முறை நாடு மாறும் ஆச்சரிய தீவு
ஐரோப்பிய கண்டத்தில் பிரான்ஸ்-ஸ்பெயின் நாடுகள் இடையே இயற்கையான எல்லையாக பீடாகோ ஆறு உள்ளது. இது ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளை பிரித்து பாய்ந்தோடுகிறது. இந்த ஆற்றின் நடுவில் பிசான் தீவு உள்ளது. அமைதியான இந்த தீவு மரங்களால் சூழப்பட்டுள்ளது. இங்கிருந்து பார்த்தால் பிரான்ஸ் பகுதியில் தொழில்துறை கிடங்குகளும், ஸ்பெயின் பகுதியில் குடியிருப்புகளும் தெரியும்.
இத்தீவு 2 நாடுகளுக்கும் சொந்தமானது. 200மீட்டர் நீளமும் 40 மீட்டர் அகலமும் கொண்டது. ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய 2 நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக பிரச்சினை இருந்து வந்தது.
எனவே, 1659-ம் ஆண்டு 2 நாடுகளும் இங்குதான் 3 மாதங்கள் பேச்சுவார்த்தை நடத்தின. முடிவாக பைரனீஸ் ஒப்பந்தம் எனும் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. அது ஒரு அரச திருமணத்துடன் நடந்தது.
பிரான்ஸ் மன்னர் 16-ம் லூயிஸ் ஸ்பெயின் மன்னர் 4-ம்பிலிப்பின் மகளை திருமணம் செய்து கொண்டார். அதை தொடர்ந்து நடுநிலை மண்டலமாக இருந்த இத்தீவு 2 நாடுகளாலும் பகிர்ந்து கொள்ளப்பட்டது.
9,942 சதுர அடியுள்ள இந்ததீவு 6 மாதம் பிரான்ஸ் வசமும், 6 மாதம் ஸ்பெயின் வசமும் மாறிமாறி இருக்கும். அதன்படி ஒவ்வொரு ஆண்டின் பிப்ரவரி 1 முதல் ஜூலை 31 வரை இத்தீவு ஸ்பெயின் அரசின் கீழ் இருக்கும். மீதி 6 மாதம் பிரான்ஸ் அரசின் கீழ் இருக்கும். இது கடந்த 350 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்த தீவை பார்க்க குறைந்த பார்வையாளர்களே அனுமதிக்கப்படுகின்றனர். தீவுக்கு குறைந்த முன்னுரிமையே வழங்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply