மகிந்த ஆட்சியில் செய்ய முடியாததை இந்த ஆட்சியில் செய்கிறோம் :சம்பந்தன்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் செய்ய முடியாத அரசியல் சீர்திருத்த நடவடிக்கைகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுவருவதாக எதிர்க் கட்சித் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் தெரிவித்துள்ளார். கல்முனை மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அங்கு தொடர்ந்தும் பேசிய அவர், ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கு முழுமையாக தமிழ் மக்கள் வாக்களித்து இருக்கின்றனர். இதன் பயனாக நாட்டில் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய சம அந்தஸ்தை வழங்கக் கூடிய ஒரு அரசியல் தீர் ஏற்படவேண்டும் என்பதற்காக ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
பழைய ஜனாதிபதியின் காலத்தில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. அது பயன் கிடைக்கவில்லை. அதன் பின் ஆட்சி மாற்றத்தினை தமிழ் மக்கள் ஏற்படுத்துவதற்கு முழுமையாக வாக்களித்து இருக்கின்றனர்.
இந்நிலையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயம் சம்பந்தமாக முயற்சிகள் நடைபெற்று வருகின்றது. அரசியல் தீர்வு விடயமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கணிசமான துரம் பயனித்துள்ளது. இன்னும் ஒரு முடிவும் கிடைக்கப்பெறவில்லை. அதனைப் பெறுவதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.
பாராளுமன்றம் ஒரு அரசியல் சாசனமாக மாற்றப்பட்டு நடவடிக்கைக்குழு அமைக்கப்பட்டு உப குழு அமைக்கப்பட்டு இடைக்கால அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு விவாதங்கள் நடைபெற்று தேர்தல் நிறைவு பெற்றபின்னர் அது முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போது அரசியல் நடைமுறையை எடுத்துக்கொண்டு செல்வதற்காக அனைத்து தமிழ் மக்களும் த.தே.கூட்டமைப்பிற்கே வாக்களிக்க வேண்டும்.
1987 ஆம் ஆண்டு இந்தியா இலங்கை ஒப்பந்தத்தின் 13 திருத்த சாசனத்தின் மூலம் வட கிழக்கு இணைப்பு இருந்து வந்த நிலையில், 18 வருடத்திற்குப் பின்னர் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் பிரிக்கப்பட்டு இருக்கின்றது என்றார்.
இந்நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபையின் அமைச்சருமான கி.துரைராசசிங்கம் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் கவீந்திரன் கோடீஸ்வரன் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply